கொடுத்த
வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டதாக மத்திய மந்திரி பொன்
ராதாகிருஷ்ணன் கூறினார்.
அஞ்சலி
ராமநாதபுரம்
மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி, மத்திய
மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று
மாலை அஞ்சலி செலுத்தினார். தேசிய
செயலாளர் எச்.ராஜா, மாநில
துணைத்தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர்,
பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரதமரை
அழைத்து வருவேன்
தேசியத்தையும்,
தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி
வந்தவர் பசும்பொன் தேவர். சென்ற குருபூஜையில்
கலந்து கொண்டு, அடுத்து பிரதமராக
மோடி வரவேண்டும் என்று தேவரை வணங்கிச்
சென்றேன். அதேபோல் மோடி பிரதமர்
ஆனார். தேவரிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேறும்.தேவரை பற்றி மோடிக்கு
கடிதம் எழுதி உள்ளேன். வருங்காலத்தில்
பிரதமரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு அழைத்து
வர முயற்சி செய்வேன்.
வாக்குறுதியை
மீறிவிட்டார்
மீனவர்கள்
பிரச்சினை பற்றி மத்திய அரசு
தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இந்த
ஆண்டில் இதுவரை தமிழக மீனவர்கள்
500–க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கு பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜும்தான்
காரணம். மீனவர்களின் படகை விடுவிக்க தீவிர
முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா
வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம்,
தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று
கேட்ட போது, தற்போது தூக்கு
தண்டனை விதிக்கப்பட்ட அந்த 5 பேரையும் சேர்த்துதான்
கேட்டு இருந்தோம். அப்போது ராஜபக்சேவும், இதுகுறித்து
உடனடி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் அவர் தனது
வாக்குறுதியை மீறிவிட்டார்.
சட்டபூர்வ
நடவடிக்கை
தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை என்பது
அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மீனவர்களை விடுவிக்க
மத்திய அரசு ஏற்பாடு செய்யும்.
இதுகுறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு
பரிசீலனை செய்து வருகிறது.இவ்வாறு
பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment