எத்தனை
பாராட்டுக்களைப் பெற்றாலும் சரி, அதற்கு சளைக்காமல்
நேர் எதிர் விமர்சனங்களையும் பெறுவது
விஜய் படங்களின் தனிச்சிறப்பு. விஜய் நடித்த ‘கத்தி’
படத்தின் கதையே திருட்டு என்றதொரு
குற்றச்சாட்டு எழுந்து, பின்னாளில் காணாமல் போனது. ஆனால்
தற்போது அதைவிட அதிகமாக சூடு
பிடித்திருப்பது கத்தி திரைபப்டத்தில் இடம்பெற்றுள்ள
‘ஆத்தி என, நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்’ என்ற
பாடலின் இசை திருடப்பட்டது என்பது
தான்.
இதற்கு
ஆதாரமாக சொல்லப்படுவது ’Aathi (Kaththi)
- Cover By Inno Genga’ என்ற
பெயரில் யூடியூபில் வலம் வரும் வீடியோ.
Inno Genga என்பவர் தனது பாடல் திறமையை
வெளிப்படுத்த புதுப்படங்களில் இடம்பெறும் பாடல்களை ஆங்கிலத்தில் பாடி யூடியூபில் பதிவேற்றுவார்.
இப்படி கத்தி படத்தின்
பாடல்கள் ரிலீஸான போது, அவர்
பாடிய பாடல் தான் ’Aathi (Kaththi) - Cover By Inno Genga’ என்ற பெயரில் உலா
வருகிறது. அந்த வீடியோவிலேயே இது
கத்தி படத்திலுள்ள ஆத்தி பாடலின் ரீமிக்ஸ்
என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தி படத்திற்கு அற்புதமாக
இசையமைத்து கொடுத்ததாகச் சொல்லி அனிருத்திற்கு விஜய்
பியானோ ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார்.
அந்த உண்மை வீடியோ
No comments:
Post a Comment