Saturday, October 25, 2014

எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்

கத்தி படம் முதல் நாள் வசூலில் எந்திரனை பின்னுக்கு தள்ளியதாக ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

கத்தி தமிழகத்தில் சுமாராக 455 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் இப்படம் 12.5 முதல் 13 கோடிவரை வசூலித்ததாக கூறப்படுகிறது. நான்கு வருடங்களுக்கு முன் எந்திரன் 600 திரையரங்குகளில் வெளியானது. அதன் முதல் நாள் வசூல் 11 கோடிகள்.

எந்திரனுடன் ஒப்பிடுகையில் ஒன்றரை முதல் இரண்டு கோடிவரை கத்தியின் முதல்நாள் வசூல் அதிகம் என்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு வசூலில் எந்திரனுக்கு அடுத்த இடத்திலேயே கத்தி உள்ளது.


மேலும் கேரளாவில் முதல் நாளில் 1.75 கோடியும், கர்நாடகாவில் 2.2 கோடியும் கத்தி வசூலித்துள்ளது. இதில் கர்நாடகாவில் ஒரு தமிழ்ப் படம் இவ்வளவு அதிகம் வசூலித்தது இதுவே முதல்முறை.


No comments:

Post a Comment