90களில் ரகுவரன்,
நாசர், பிரகாஷ்ராஜ் என 3 வில்லன் நடிகர்கள் கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருந்தனர்.
ரகுவரன் மறைவுக்கு பிறகு பிரகாஷ்ராஜ், நாசர் அந்த இடத்தை நிறைவு செய்தனர்.
தற்போது இவர்களும்
குணசித்ர வேடங்களுக்கு மாறிவிட்டதையடுத்து வில்லன்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டிலிருந்து வில்லன் நடிகர்களை அழைத்து வருகின்றனர். ‘துப்பாக்கியில் வித்யூத்,
‘கத்தியில் நெய்ல் நிதின் முகேஷ் வந்தனர். பாலிவுட் வில்லன்களுக்கு போட்டியாக கோலிவுட்டிலும்
தற்போது புதுவில்லன்கள் வந்திருக்கின்றனர். பீட்சா, சூதுகவ்வும், ஜிகர்தண்டா, ஆடாம
ஜெயிச்சோமடா படங்களில் பாபி சிம்ஹா நடித்தார். சிகரம் தொடு, யான் படங்களில் வினாயக்ராஜ்
என்கிற விஜய்ராஜ் நடித்தார்.
வில்லன் டிமாண்ட்
பற்றி வினாயக்ராஜிடம் கேட்டபோது,‘அந்த காலம் தொட்டே கோலிவுட்டில் வில்லன் நடிகர்கள்
பலர் மறக்க முடியாதளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கின்றனர். ரகுவரன் இழப்பு பெரிய
வெற்றிடமாக உள்ளது. வரும் நடிகர்கள் எல்லோருமே ஹீரோ ஆக வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை
ரகுவரன், பிரகாஷ்ராஜ் போல் வர ஆசைப்படுகிறேன். கவுரவ் இயக்கிய சிகரம் தொடு படத்திற்காக
6 மணி நேரம் தலைகீழாக தொங்கியபடி நடித்தேன். அடுத்து சீனு ராமசாமியின் ‘இடம் பொருள்
ஏவல், கமல் உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும் பேரரசு, விஜயகுமார் ஆகியோர்
இயக்கும் படங்களில் நடிக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment