Friday, October 31, 2014

பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்

பாலிவுட் நடிகரை சனா கான் காதலன் திடீரென்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சனா கான். தமிழ் படங்களில் வாய்ப்பில்லாததால் பாலிவுட்டில் நடிக்க சென்றார். சல்மான் கான் நடத்திய டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பிறகு சல்மானுடன்ஜெய் ஹோ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு இளம் பெண் ஒருவரை மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கிய சனா கான் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.


சனாவின் காதலன் இஸ்மாயில். ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த பாலிவுட் நடிகர் சாஹில் கானை சந்தித்தார். ‘சனாவை பற்றி நீதானே தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு தருகிறாய் என்று கோபமாக கேட்டபடி தாக்கத் தொடங்கினார். இதுகுறித்து மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் சாஹில் புகார் செய்தார்அப்படி எதுவும் நான் செய்யவில்லை என்று கூறினேன். ஆனாலும் என்னை தாக்குவதை நிறுத்தவில்லை. பிறகுதான் பத்திரிகையில் சனா கான், இஸ்மாயில் போலி பாஸ்போர்ட் பற்றிய செய்தி வெளியாகி இருந்தது எனக்கு தெரிந்தது. அந்த செய்திக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எதனால் என்னை இந்த விவகாரங்களில் இழுத்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.


No comments:

Post a Comment