கத்தி திரைப்படம் வசூல் சாதனைகளை புரிந்து
வருவதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
ட்விட்டரில் விடாது கூறிவருகிறார். நல்ல
கருத்துகளைக் கொண்ட படம் என்பதால்
மக்களிடையே கத்தி திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும்
வரவேற்பு பல்வேறு திரையுலகங்களின் பார்வையையும்
கத்தி திரைப்படத்தின் மீது திருப்பியுள்ளது.
தெலுங்கு,
கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் கத்தி
திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிவிட
வேண்டும் என்ற முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸை துரத்திக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நடிகர் விஜய்யோ ரீமேக்
உரிமையை கொடுக்க வேண்டாம். கத்தி
திரைப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுவிடுவோம்
என்று கூறிவிட்டாராம்.
பொதுவாகவே
மற்ற மொழி படங்களை ரீமேக்
செய்து நடித்து வெற்றிபெற்ற விஜய்,
இந்த முறை தன் படம்
மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதை விரும்பவில்லையாம்.
தமிழ்த்திரையுலகில் தனது அந்தஸ்தை வேறு
நிலைக்கு மாற்றிய கத்தி, மற்ற
மொழிகளிலும் அப்படியே ரிலீஸாக வேண்டும் என்பது
அவரது எண்ணம் என்கின்றனர் கத்தி
படக்குழுவினர்.
விஜய்யின்
ஆசைப்படியே டப்பிங் செய்து வெளியிட
முடிவெடுத்துவிட்ட முருகதாஸ், தயாரிப்பாளர்களிடம் நேரடியாக மறுக்க முடியாமல் அவர்களை
சந்திப்பதை தவிர்த்துக்கொண்டிருக்கிறார். அதையும் மீறி முருகதாஸை
பிடித்துவிடும் தயாரிப்பாளர்களிடம் கத்தி ’சக்சஸ் மீட்’டிற்காக ஊர் ஊராக
சுற்றிக்கொண்டிருக்கிறேன் எனச் சொல்லி தப்பித்துவிடுகிறாராம்.
அது என்ன ஊர் ஊராக
சுற்றும் சக்சஸ் மீட் என்கிறீர்களா?
கத்தி படத்தில் பத்திரிக்கையாளர்களையும், ஊடகங்களையும் திருத்துகிறேன் என்ற பெயரில் ஓவராக
பேசிவிட்டதை உணர்ந்து, சக்சஸ் மீட் வேண்டாம்
என்று சொல்லிவிட்டு, தமிழகத்திலுள்ள பல்வேறு தியேட்டர்களுக்கும் சென்று
ரசிகர்களுடனே வெற்றியை கொண்டாடுகிறாராம் முருகதாஸ்.
No comments:
Post a Comment