என் தாய்க்கு கோவில் கட்டுகிறேன் என்று
நடிகர் லாரன்ஸ் அறிவித்து உள்ளார்.
ராகவேந்திரர்
பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவர் தமிழ், தெலுங்கில் நிறைய
படங்களில் நடித்துள்ளார். டைரக்டும் செய்துள்ளார். லாரன்ஸ் நடித்த முனி,
காஞ்சனா பேய் படங்கள் வெற்றிகரமாக
ஓடின. சில வருடங்களுக்கு முன்பு
ராகவேந்திரருக்கு கோவில் கட்டினார். இப்போது
தன்னை பெற்றதாய் கண்மணிக்கும் கோவில் கட்டப்போகிறார்.
இதற்காக
தந்தை ஊரான பூந்தமல்லி அருகில்
உள்ள மேவலூர் குப்பம் என்ற
ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார்.
தாயாரின் உருவச்சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை தனது
பிறந்த நாளான இன்று (புதன்கிழமை)
தொடங்குகிறார்.
இது குறித்து லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்
கூறி இருப்பதாவது:–
தாயில்
சிறந்த கோவில் இல்லை
தாயின்
மனதே ஒரு கோவில் தான்.
அந்த தாய்க்கு அந்த தாய் வாழும்
போதே கோவில் கட்டி பெருமை
படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை.
என் தாய் மட்டும் இல்லை
என்றால் எப்போதோ நான் இறந்த
இடத்தில் புல் முளைத்திருக்கும். எல்லோருக்கும்
கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற
தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோவிலும்
இல்லை என்ற உயரிய கருத்தை
மெய்ப்பிக்க வேண்டும். என்ற ஆசையால் இந்த
கோவிலை கட்ட உள்ளேன்.
எல்லா தாய்க்கும்
என் தாய்க்கு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும்
நான் இதை சமர்ப்பிக்கிறேன்.
எனது தாய் என்னை வளர்ப்பதற்காக
பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக எழுதி
அடுத்த வருடம் எனது பிறந்தநாளான
இதே தேதியில் அந்த கோவில் திறப்பு
விழாவில் வெளியிட உள்ளேன்.
இவ்வாறு
அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment