சொத்துப்
பிரச்சினையை தனது சகோதரர் இன்னும்
இரண்டு நாளில் முடிக்காவிட்டால் வழக்குத்
தொடரப் போவதாக நடிகர் கார்த்திக்
தெரிவித்தார். நடிகர் கார்த்திக்குக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து
தகராறு நடந்து வருகிறது.
இப்பிரச்னை
தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென
வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர்
தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக
சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை போலீசில்
நடிகர் கார்த்திக் புகார் மனு ஒன்றை
அளித்திருந்தார். அதில் அவர், ஆழ்வார்பேட்டையில்
என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்தில் எனக்கு
எதுவும் பங்கு கிடையாது என்கிறார்
எனது சகோதரர் கணேசன். மேலும்
என்னை வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறுகிறார். மேலும் உயிலில் எனது
பெயரும் இல்லை. எனது சகோதரர்
எனது சொத்தை மோசடி செய்துள்ளார்.
அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு
தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கும் உரிய
பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என கூறி இருந்தார்.
உடனே கார்த்திக் மீது அவரது அம்மா
சுலோசனாவே ஒரு புகார் கொடுத்திருந்தார்.
இந்த சமயத்தில், தனது குடும்ப விவகாரம்
தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி
செய்தியாளர்களுக்கு கார்த்திக் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது
கூறுகையில், "போயஸ் கார்டனில் இருக்கும்
வீடு தொடர்பாக எனக்கும் என் சகோதரர் கணேசனுக்கும்
இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த
இடத்தில் அப்பாட்மென்ட்ஸ் போல் கட்டி, இருவரும்
வசிக்கலாம் என நான் கூறினேன்.
ஆனால் அதனை ஏற்க
அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து
பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை.
இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னையை
முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி
வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்.
மற்றபடி, நான் வீட்டை விட்டு
வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில்
தான் இப்போது வரை இருந்து
வருகிறேன்," என்றார்.
No comments:
Post a Comment