மிகக்குறைவான
வாழ்க்கை செலவு காரணமாக, வெளிநாடுகளைச்
சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளை விட்டு
வெளியேறி, இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
எச்.எஸ்.பி.சி.,
நிறுவனம், உலகம் முழுவதும் தங்கள்
சொந்த நாட்டை விட்டு வெளியேறி,
வேறு நாடுகளில் வசிப்பவர்கள் குறித்த ஆய்வை சமீபத்தில்
நடத்தியது. இதில், 'இவ்வாறு குடி
பெயர்வதற்கான காரணம் என்ன' என்பது
குறித்த கேள்வியும் முன் வைக்கப்பட்டது.
இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தங்கள் நாடுகளை
விட்டு வெளியேறி, வேறு நாட்டுக்கு செல்ல
விரும்புவோரில் பெரும்பாலானோர், சுவிட்சர்லாந்தை தான் தேர்வு செய்கின்றனர்.
இங்குள்ள சூழ்நிலையும், கலாசார விஷயங்களும் தங்களை
பெரிதும் கவர்ந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.இந்த
பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூரும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன. நான்காவது இடத்தில்
ஜெர்மனியும், ஐந்தாவதாக பக்ரைனும் இடம் பெற்றுள்ளன.இந்த
பட்டியலில், இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவை
தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து, பலரும்
கூறுகையில், 'இங்கு, அன்றாட குடும்பத்தை
நடத்துவதற்கான வாழ்க்கை செலவு, மிகவும் குறைவாக
உள்ளது. குழந்தைகளை வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற
செலவு கள், எங்கள் நாட்டை
விட இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது.
வேலை - குடும்பம் ஆகிய இரண்டு விஷயங்களையும்
சமமாக கையாளுவது, இங்கு எளிமையாக உள்ளது'
என, தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment