Thursday, October 30, 2014

’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!

என்னை அறிந்தால்என்பது தான் நீண்ட நாட்களாக ரசிகர்களை காக்க வைத்திருந்த அஜித் - கௌதம் மேனன் திரைப்படத்தின் டைட்டில். அஜித் படத்தின் டைட்டிலாக மாறும் வரையில் என்னை அறிந்தால் என்பது சாதாரண வார்த்தையாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் பல கோணங்களில் அலசப்பட்டு, சமூக வலைதளங்கள் அல்லல்படுகின்றன.



திரையுலக நட்சத்திரம் என்பதை மறந்து, சாதாரண ரசிகனாக திரையுலகினர் பலரும்என்னை அறிந்தால்டைட்டிலை புகழ்ந்து வருகின்றனர். அடுத்து விஜய்யின் படத்தை தயாரிக்கவிருக்கும் தனுஷ் ட்விட்டரில்என்னை அறிந்தால், அஜித் சாருக்கு பொருத்தமான டைட்டில். பவர்ஃபுல்லானமாஸ் - கிளாஸ்டைட்டில். கௌதம் மேனன் டைட்டில் தேர்ந்தெடுப்பதில் சிறந்தவர்என்று புகழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.


இசையமைப்பாளர் அனிருத் “ ‘தலக்கு ஏத்த டைட்டில். கௌதம் மேனன் அவரது சிறந்த படத்தை கொடுப்பார்என்று கூறுகிறார். வழக்கம்போல இந்தமுறை டைட்டில் தேர்ந்தெடுத்த போதும் என்னை முன்னிறுத்தி டைட்டில் வைக்கவேண்டாம், கதைக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம் அஜித். அதன்பிறகு கௌதம் மேனன் சொன்ன இந்த டைட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.


No comments:

Post a Comment