இன்னும்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீட்டு வழக்கு குறித்து கத்தி
படத்தில் தவறான வசனம் பேசிய,
அதை எழுதிய, படமாக எடுத்த
நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ்
மற்றும் தயாரிப்பாளர் லைகா நிறுவனம் மீது
மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு
தொடரப்பட்டது.
இதுகுறித்து
பதில் அனுப்புமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை
சம்பந்தப்பட்ட மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கத்தி படத்தில் விஜய்
கழுத்து நரம்பு புடைக்க பேசும்
வசனங்களில் முக்கியமானது 2ஜி அலைக் கற்றை
ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் பற்றியதாகும்.
வெறும் காத்தை வச்சே
2ஜிங்கற பேர்ல லேயே கோடி
கோடியாக ஊழல் செஞ்ச நாடு
இது, என்று வசனம் பேசுவார்.
இந்த வசனம் கேட்டு தியேட்டர்களில்
கைத்தட்டல் எழுந்தாலும், அதைத் தாண்டி யோசிப்பவர்களுக்கு
பலத்த அதிர்ச்சியைத் தந்தது.
காரணம், 2 ஜி அலைக் கற்றை
முறைகேடு வழக்கு என்பது இன்னும்
நிலுவையில் உள்ள ஒன்று. நடந்தது
ஊழலா.. அரசுக்கான இழப்பா என்பதை நீதிமன்றம்தான்
சொல்ல வேண்டும். இந்த 2 ஜி இழப்பு
என்பது, மக்களுக்காக சலுகை விலையில் அலைக்கற்றையை
விற்றதால் வந்ததுதான் என்ற வாதம் நீதிமன்றத்தில்
வைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு
மறுக்கவும் இல்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
ஊழல் நடந்ததாக நீதிமன்றமும் குறிப்பிடவில்லை. இழப்பு ஏன் என்றுதான்
வாதம் நடந்து கொண்டுள்ளது. இதில்,
துறைக்கு சம்பந்தமே இல்லாத சிலர் தனிப்பட்ட
முறையில் ஆதாயமடைந்தது பற்றியும் வழக்கு நடந்து வருகிறது.
நிலைமை இப்படி இருக்கையில்,
ஒரு சினிமா இயக்குநரும், நடிகரும்
இந்த வழக்குக்கு எப்படி படத்தில் தீர்ப்பெழுத
முடியும்... 2ஜியில் ஊழல் நடந்ததாகச்
சொல்ல முடியும் என்று கேட்டு மதுரை
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள
வசனங்கள் நீதித்துறையையே அவமதிக்கும் செயல் என்றும் மனுதாரர்
தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம்,
நீதித்துறையை கத்தி படக்குழு அவமதித்ததற்கான
முகாந்திரம் உள்ளதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்று,
படத்தில் அந்த வசனத்தைப் பேசிய
நடிகர் விஜய், வசனம் எழுதிய
ஏ ஆர் முருகதாஸ்,
படத்தைத் தயாரித்த லைகா (தயாரிப்பாளர் என
வேறு யார் பெயரும் குறிப்பிடப்படாததால்)
நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
No comments:
Post a Comment