‘என்னை மணக்க பாவனா ஒன்றும் பைத்தியம் இல்லை‘ என்கிறார் இயக்குனர்.பாவனாவை
ஞாபகம் இருக்கிறதா? சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்ளிட்ட படங்களில்
நடித்தவர். தமிழில் படங்கள் கிளிக் ஆகாததால்
மலை யாள படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது கன்னட
படங்களிலும் தலை காட்டுகிறார். பாவனாவுக்கும் நடிகர் அனூப்மேனனுக்கும் காதல் என்று
கிசுகிசு வந்தது. அது தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. சினிமா சம்பந்தமில்லாத ஒரு
பெண்ணை மணக்கப்போவதாக அனூப் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் ‘ஓம்
சாந்தி ஓஷனா‘
பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது பேஸ்புக்கில், ‘விரைவில் திருமணம் செய்துகொள்ள
முடிவு செய்துள்ளேன். அவர் யாரென்று யூகம் செய்யுங்கள் என சஸ்பென்ஸ் கிளப்பிவிட்டார்.
அதைப்பார்த்த அவரது நண்பர்களும், ரசிகர்களும்
நடிகை பாவனா, கேர்ள் பிரண்ட் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் ஷாக் ஆன இயக்குனர்,‘எனக்கு வரப்போகும் பெண்
ஏற்கனவே என் படத்தில் நான் நடிக்க வைத்த எனது மாஜி கேர்ள் பிரண்ட் கிடையாது. அவரை மறுபடியும்
ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் திருமணம் ஆகி கணவர் குழந்தையுடன்
வாழ்ந்து வருகிறார்.
அவரது உணர்வுகளை
காயப்படுத்த வேண்டாம். நடிகை பாவனா என்பதும் தவறு. என்னை மணந்துகொள்ள அவர் ஒன்றும்
பைத்தியம் அல்ல. நான் பார்த்திருக்கும் பெண் யார் என்பதை பிறகு சொல்கிறேன் என மறுபடியும்
சஸ்பென்ஸ் விட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment