திருப்பங்கள்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும். மகிழ்ச்சியான திருப்பங்கள்
மட்டுமல்ல, சோகமான திருப்பங் களும்
ஏற்படத்தான் செய்யும். ஆனால் திருப்பங்கள் ஒவ்வொருவர்
வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவங்களை
தருகின்றன.
நடிகைகளின்
வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை அவர்களே
சொல்ல கேட்போமா!
பிரியங்கா
சோப்ரா
இவர் பெண்களையே தனக்கு உதவியாளராக நியமித்திருக்கிறார்.
அவர்களுக்கு வேலையையும் அதோடு மனோ பலத்தையும் தன்னால் தர முடியும்
என்கிறார்.
‘‘ஒவ்வொரு
மனிதருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ தேவைகள் இருக்கின்றன.
அவர் களுக்குள்
எவ்வளவோ ஆசைகளும் இருக்கின்றன. அவைகள் எல்லாம் நிறைவேறாத
பட்சத்தில் விரக்தி அடைந்து ஏமாற்றத்தை
எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டால்
அவர்கள் வாழ்க்கையே உற்சாகமாகிவிடுகிறது. என் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட
விஷயங்கள் நடந்திருக்கின்றன.
எதிர்பாராத
ஒரு விமான விபத்தை நான்
சந்திக்க நேர்ந்தது. நான் உயிர் பிழைத்தது
மறு பிறவி என்று தான்
சொல்ல வேண்டும். அந்த நேரத்தில்கூட நான்
என்னை பற்றி சிந்திக்கவில்லை. என்னுடன்
பயணித்த அத்தனை பேரையும் பற்றி
தான் சிந்தித்தேன். அப்போது ஏற்பட்ட பதற்றத்தில்
இருந்து நான் மீள வெகுநாட்கள்
ஆகிவிட்டன.
அப்போதுதான்
எனக்கு இந்த வாழ்க்கையின் தத்துவம்
புரிந்தது. கண்மூடி திறப்பதற்குள்ளே நம்
வாழ்க்கை காணாமல் போய்விடக்கூடும் என்ற
உண்மையை உணர்ந்தேன். வாழ்க்கை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தேன். எதிர்பார்ப்பை குறைத்தேன். விரக்தியில் இருந்து விடுபட்டேன். புதிய
பிரியங்காவாக என் வாழ்க்கையை தொடங்கினேன்.
வெற்றிபெற்றேன்..’’ என்கிறார்.
2000–ம்
ஆண்டில் ‘மிஸ் இந்தியா’ அடுத்து
‘மிஸ் வேல்டு’ போன்ற பட்டங்களை
வென்ற பிறகுதான் பிரியங்கா சினிமாவிற்கு வந்தார். ‘ஜத்ராஜ்’ பட வெற்றியால் இந்தி
திரை உலகில் உச்சத்துக்கு போனார்.
அதில் அவர் ஏற்றிருந்த வித்தியாசமான
கதாபாத்திரம் விருதையும் பெற்றுத் தந்தது.
‘‘ஆணவம்,
பொறாமை, பேராசை இதெல்லாம் தூக்கி
எறியப்பட வேண்டிய விஷயம். அவைகளை
தூக்கி எறிந்தால்தான் நாம் அனைவராலும் விரும்பப்படுவோம்.
அந்தப் பக்குவத்தை மரணவாயிலை தொட்டு விட்டு திரும்பிய
பிறகுதான் நான் பெற்றிருக்கிறேன். என்
வாழ்க்கையில் பெரிய திருப்பம், விமான
விபத்துதான்’’ என்கிறார்.
நவாசுதீன்
சித்தீகி (நடிகர்)
‘‘என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர், அஞ்சலி என்ற பெண்.
அவளால் எனக்கு ஏற்பட்டது அவமானம்.
அந்த அவமானம்தான் என் வாழ்க்கையை திருப்பிப்போட்டது.
சினிமாவில்
நடிக்கும் ஆசை சிறுவயதிலேயே எனக்கு
இருந்தது. அதற்காக டெல்லி திரைப்பட
கல்லூரியில் படித்தேன். படித்து வெளியே வந்த
எனக்கு வேலை கிடைக்கவில்லை. சினிமா
வாய்ப்பிற்காக அலைந்தேன். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மும்பை வந்து சேர்ந்தேன்.
ஒரு சினிமா கம்பெனியில் என்
திறமையை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது அங்கே அஞ்சலியை சந்தித்தேன்.
அவளே விரும்பி நெருங்கிப் பழகினாள். ஒரு முறை நான்
வசிக்கும் வீட்டிற்கே வந்தாள். சிறிய அறை, நெருக்கடியான
இடம். காற்றுகூட வர வசதியில்லாத இடத்தில்
நான் தங்கியிருந்தேன். அதைப் பார்த்து முகம்
சுளித்த அஞ்சலி ஓடியே போய்விட்டாள்.
அதன்பிறகு என்னை சந்திக்கவோ, பேசவோ
அவள் விரும்பவில்லை.
என் நிலைமையை கண்டு நானே அவமானப்பட்டேன்.
அது எனக்குள்ளே ஒரு வெறியாக வளர்ந்தது.
என் முயற்சிகள் வேகமெடுத்தது. பிறகு டைரக்டர் அனுராக்
கஷ்யப்பின் பார்வை என் மீது
பட்டது. நான் நடிகனாக உருவெடுத்தேன்.
நான் நடித்த ‘ப்ளாக் ப்ரைடே’
படம் வெற்றி பெற்றது. அதை
தொடந்து பல படங்கள் வந்தன.
பிரிந்து போன அஞ்சலியும் திரும்பி
வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அந்த அஞ்சலிதான் என்
மனைவி’’என்கிறார்.
கரீனா கபூர்
2000–ம்
ஆண்டு சினிமாவில் காலடி வைத்தார் கரீனா.
‘ரிப்யூஜீ’ என்ற படத்தில் நடித்தார்.
பின்பு ‘கபி குஷி கபி
கம்’ படத்தில் தலையை காட்டினார். பேசப்படவில்லை.
‘சமேலி’ படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் வேண்டா வெறுப்பாக நடித்தார்.
ஆனால் அந்தப்படம் அமோக வெற்றிபெற்று அவரை
புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
‘‘சமேலி
படம்தான் என் வாழ்க்கையில் திருப்பத்தை
ஏற்படுத்தியது. திருப்பம் என்பது ஒரு மகிழ்ச்சி.
நாம் நம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தால்
என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில்
திருப்பம் ஏற்படும். சமேலி கொடுத்த திருப்பத்திற்கு
பின்னால் நான் வாழ்க்கையை திரும்பிப்
பார்க்கவே இல்லை..’’ என்கிறார்.
ஜான் ஆப்ரகாம்
‘திருப்புமுனை
எல்லோர் வாழ்விலும் வரும். ஆனால் எல்லோரது
வாழ்க்கையும் அதன் மூலம் உயர்ந்துவிடுவதில்லை.
திருப்புமுனையை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் மட்டும்தான் வெற்றி
பெற்றிருக்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள
கல்வியறிவு தேவை. அறிவும், அனுபவமும்
இருந்தால் மட்டுமே திருப்புமுனை, வாழ்க்கையில்
நல்ல திருப்பத்தை தரும். திருப்புமுனை, மகிழ்ச்சியையும்
தரலாம். அதிர்ச்சியையும் தரலாம். எதுவந்தாலும் அறிவையும்,
அனுபவத்தையும் பயன்படுத்தி அதை எதிர்கொள்ளவேண்டும்’ என்கிறார்.
No comments:
Post a Comment