பின்லேடன்
இருப்பிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க படையினருக்கு
உதவிய ‘பெல்ஜியன் மாலின்வா’ இனத்தைச் சேர்ந்த மோப்ப
நாய்கள் தேசிய பாதுகாப்பு படையில்
(என்.எஸ்.ஜி) சேர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்-கய்தா அமைப்பின்
தலைவர் ஒசாமா பின்லேடனை,
அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு கடந்த
2011ம் ஆண்டு
சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றது. அப்போது நடந்த தேடுதல் வேட்டையில்
சீல் பிரிவினர் ‘பெல்ஜியன் மாலின்வா’ வகையை சேர்ந்த மோப்ப நாயை தங்களுடன்
அழைத்துச் சென்றனர். இதுதான் பின்லேடனை
கண்டுபிடித்து சீல் படையினருக்கு சிக்னல்
கொடுத்தது. அதையடுத்து
அமெரிக்க வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்
பின்லேடன் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
நீண்ட மூக்கு, பெரிய தலையை
உடைய இந்த வகை மோப்ப
நாய், சந்தேகிக்கும்
நபர் அல்லது பொருளை கண்டுபிடித்து
விட்டால் உடனே குரைக்காது.
தலையை ஆட்டி வீரர்களுக்கு சிக்னல்
கொடுக்கும். இதை வீரர்கள்
புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பர்.
பின்லேடன் வேட்டைக்குப்
பின் மாலின்வா வகை நாய்கள் சர்வதேச
புகழ் பெற்றன. இந்த
வகை மோப்ப நாய்கள் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையில்
கடந்த 2011ம் ஆண்டே சேர்க்கப்பட்டு
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின்
முக்கிய கமாண்டோ படையான என்.எஸ்.ஜி.யில்
இதுவரை ஜெர்மன்
செப்பர்ட், லெப்ரேடர் வகை மோப்ப நாய்களே பயன்படுத்தப்பட்டு
வந்தன. தற்போது என்.எஸ்.ஜியின் ‘கே9’ நாய்ப்படையில் ஒரு டஜன் ‘பெல்ஜியன்
மாலின்வா’ நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment