லோக்சபா
எம்.பி.,க்களாக பதவியேற்று,
90 நாட்களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல்
செய்யாத, 401 பேர் பட்டியலில், பா.ஜ., மூத்த தலைவர்
அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல் பெயர்கள்
இடம் பெற்றுள்ளன.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்
கீழ், லோக்சபா தலைமைச் செயலகத்தில்
பெறப்பட்ட இந்த விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பா.ஜ.,வைச்
சேர்ந்த, 209 லோக்சபா எம்.பி.,க்கள், தங்கள் சொத்து
விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. அவர்களில், அத்வானி, சுஷ்மா சுவராஜ், நிதின்
கட்காரி, உமா பாரதி முக்கியமானவர்கள்.
காங்கிரசில், 31 பேர், கணக்கு சமர்ப்பிக்கவில்லை.
அவர்களில், அக்கட்சியின் தலைவர், சோனியா, துணைத்
தலைவர் ராகுல் ஆகியோர் பிரபலமானவர்கள்.
இந்த வகையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 27, பிஜு ஜனதாதளம் கட்சியின்
18, சிவசேனாவின் 15, தெலுங்கு தேசத்தின் 14, அ.தி.மு.க.,வின் ஒன்பது,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் எட்டு எம்.பி.,க்கள் தங்கள் சொத்து
விவரத்தை, லோக்சபா தலைமைச் செயலகத்திற்கு
தெரிவிக்கவில்லை.இவ்வாறு அந்த தகவலில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment