இந்த ஆண்டின் சிறந்த திரையுலக
பிரமுகர் விருது நடிகர் ரஜினிகாந்துக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்பட நூற்றாண்டு
விழாவை ஒட்டி ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.
கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில்
இந்த விருது வழங்கப்படவுள்ளது. நவம்பர்
20 முதல் 30 வரை கோவாவில் இந்திய
சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
நவம்பர்
20-ம் தேதி தொடக்க விழாவின்
போது ரஜினிகாந்துக்கு விருது வழங்கபடுகிறது. தொடக்க
விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் தலைமை
விருந்தினராக கலந்து கொள்கிறார். ரஜினிக்கு
விருது பற்றிய அறிவிப்பை அமைச்சர்
ராஜ்யவர்த்தன் வெளியிட்டார்.
No comments:
Post a Comment