டிவி ரியாலிட்டி நடிகையான ஏமி சைல்ட்ஸ் எபோலா
என்பது உயிர்கொல்லி வைரஸ் என்பது தெரியாமல்
அது இசைக்குழு என்று நினைத்து பேசியது
பலரையும் வியக்க வைத்துள்ளது.
இங்கிலாந்தைச்
சேர்ந்த டிவி ரியாலிட்டி நடிகை
ஏமி சைல்ட்ஸ்(24). அவர் லண்டனில் நடந்த
விருது விழா ஒன்றில் கலந்து
கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து
வந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர்
ஏமியிடம் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர்
பலியாக காரணமான எபோலா உயிர்கொல்லி
வைரஸ் பரவுவதை தடுக்க நாம்
உரிய நடவடிக்கை எடுத்துள்ளோமா என்று கேட்டார்.
எபோலா வைரஸை 'இசைக்குழு' என்று
நினைத்த நடிகை
ஏமிக்கு
எபோலா என்றால் என்னவென்று தெரியாமல்
விழித்தார். பின்னர் என்ன என்று
கேட்டார். அதற்கு கேள்வி கேட்டவரோ
எபோலா பெரிய விஷயமாகப் போகிறது,
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று
ஏமியிடம் கேட்டார்.
அதற்கு
ஏமி எபோலா என்றால் வளர்ந்து
வரும் இசைக்குழு என்று நினைத்துக் கொண்டு
இன்றில் இருந்து நான் அந்த
குழுவின் பெரிய ரசிகை. அது
அருமை என்று நினைக்கிறேன் என்றார்.
உலகையே
பீதியடைய வைத்துள்ள வைரஸ் பற்றி ஏமிக்கு
தெரியாதது நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வியக்க வைத்தது.
No comments:
Post a Comment