Saturday, January 24, 2015

ஸ்ரீரங்கம் தேர்தல்: தே.மு.தி.க., வேட்பாளர் இன்று அறிவிப்பு?

ஸ்ரீரங்கம் வேட்பாளரை, பா.ஜ., அறிவித்துள்ள நிலையில், தே.மு.தி.க.,வும் இன்று, வேட்பாளரை அறிவிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ., சார்பில், நடிகர் நெப்போலியன் போட்டியிடாதபட்சத்தில், நான் வேட்பாளரை அறிவிப்பேன் எனவும், விஜயகாந்த் கூறியிருந்தார். 

அதன்படி, இன்று, தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. 

கட்சியின், திருச்சி மாநகர் மாவட்ட செயலர் விஜயராஜன், திருச்சி வடக்கு மாவட்ட செயலர் நடராஜன், திருச்சி தெற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார் ஆகியோர், விஜயகாந்தின் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். 

இன்று, தே.மு.தி.க., வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment