பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’திமுக தலைவர் கருணாநிதி 2 நாள்களாக தமது தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் வணிகர்கள், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது உண்மையாக இருக்கலாம்.
திருமங்கலம் பார்முலா இப்போது தமிழக பார்முலா ஆகியுள்ளது. இந்த பார்முலா குறித்து மக்களுக்குத் தெரியும். வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்று திமுக மறுத்தது. அது உண்மை என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் உதவியாளரே இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால்தான் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து மற்ற கட்சிகள் குற்றம்சாட்டவில்லை.
தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் இப்போதே அதற்கான காரணத்தை திமுக தேடுகிறது. இலவசங்களை அளிப்பதில் போட்டா போட்டி நடக்கிறது. தமிழகத்தை வளப்படுத்தும் செயல் திட்டங்கள் குறித்து திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளில் எதுவும் சொல்லப்படவில்லை.
இலவசங்களை அறிவிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தனர்? மக்கள்தான் சிந்திக்க வேண்டும். கேபிள் டிவியை அரசுடைமையாக்கும் அதிமுகவின் உறுதிமொழியை வரவேற்கிறோம்.
சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற மதமாற்றத் தடைச் சட்டத்தை நீக்கியது யார் என்பதில் திமுகவும், அதிமுகவும் போட்டிபோடுகின்றன. மத ரீதியான வாக்குகளைப் பெறும் இம் முயற்சியும் தேர்தல் விதிமீறலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தலைவர்கள் ஜெயலலிதாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொகுதியை ஒதுக்கியவர், பெற்றவர்கள் முகங்களில் சிரிப்பே இல்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியும் சந்தோஷ கூட்டணி அல்ல. எனவே, மே 13-ம் தேதிக்குப்பின் எந்தக் கட்சியும், யாருடனும் கை கோர்க்கலாம். யார் வேண்டுமானாலும் யாருக்கும் ஆட்சி அமைக்க உதவலாம்.
எனவே, அப்போது தமிழகம் கண்டிராத புதுமைகள் நடக்கும். குதிரைப் பேரங்களும் அரங்கேறும்.
தேர்தலில் பாஜக கணிசமான வெற்றி பெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தை குஜராத்போல மாற்றுவோம் என நாங்கள் உறுதி தெரிவிக்கிறோம்.
அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்த வைகோவை கூட்டணி குறித்து பேச கடைசியாக அழைத்தது தன்மானத்தைச் சீண்டிப்பார்க்கும் செயல்.
ஸ்பெக்ட்ரம்: கவர்ச்சி அதிகம் என்பதால், கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றும், இப்போதைய தேர்தல் அறிக்கை கதாநாயகி என்றும் திமுகவினர் கூறுகின்றனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். நகரவாசிகள், படித்தவர்கள் மத்தியில் இதுகுறித்து தெரிந்திருக்கிறது. ஏதோ கொள்ளை நடந்திருப்பதாகக் கிராம மக்களும் பேசிக்கொள்கின்றனர். எனவே, தேர்தலில் ஸ்பெக்ட்ரம் திமுகவுக்கு வில்லன் என்றார் இல.கணேசன்.
இன்றைய பதிவுகள்...
இன்றைய சினிமா செய்திகளை படிக்க இங்கே
- தமிழகம் கண்டிராத புதுமைகள் நடக்கும்- குதிரைப் பேரங...
- விஜயகாந்திற்கு தோற்கடிக்க நட்சத்திரபேச்சாளர்களை கள...
- சினிமாக்காரர்களை வெறுக்கும் ராமதாஸ் பேத்தி கல்யாணத...
- காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திடீர் மாயம்: மன...
- 100-வது சதத்துக்காக தெண்டுல்கர் காத்திருக்க வேண்டு...
- வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர்...
- தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறும்: மதுரையில் சுப்...
- ஆர்யா தம்பியின் ‘காதல் டூ கல்யாணம்'
- முன்னாள் கதாநாயகன் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் உட்க...
இன்றைய சினிமா செய்திகளை படிக்க இங்கே
No comments:
Post a Comment