உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் சண்டிகாரில் உள்ள மொகாலி மைதானத்தில் வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வந்தது. அந்த அணி கால் இறுதியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இருந்தது.
பாகிஸ்தான் வீரர்கள் முதலில் டெல்லி வந்தனர். அங்கு சில மணி நேரம் இருந்து விட்டு அங்கிருந்து மொகாலி வந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல், மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக அப்ரிடி அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
இந்தியா- பாகிஸ்தான் மோதுவதுதான் கிரிக்கெட் இரு அணி வீரர்களுமே அரை இறுதியில் வெற்றி பெற போராடுவார்கள். தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். இதனால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுடன் மோதும் போட்டியை எதிர் கொள்வதில் எங்கள் அணி வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்தப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது எனக்கு தெரியும். இதன் காரணமாக பரபரப்பான இந்த ஆட்டத்தில் வீரர்கள் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். பொதுவாக இந்தியா- பாகிஸ்தான் மோதுவது என்றாலே வீரர்களுக்கு நெருக்கடி தான் ஏனென்றால் இரு அணிகள் மோதும் போட்டிக்கு அதிக எதிர்பாப்பு இருப்பது தான் இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் எங்களை விட அவர்களுக்கு தான் நெருக்கடி அதிகமாக இருக்கும்.
உலக கோப்பை போட்டியில் நாங்கள் இந்தியாவை வென்றது இல்லை. இந்த வரலாறு மாறும் மிகவும் சவாலான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் குழு தயார் நிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதுவது கிரிக்கெட் போட்டிக்குத்தான் என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 100-வது சதத்தை எதிர் நோக்கி உள்ளார். அதற்காக அவர் உலக கோப்பை முடியும்வரை காத்திருக்க வேண்டும். தெண்டுல்கர் மட்டுமின்றி எந்த ஒரு இந்திய வீரரையும் நாங்கள் மிகப் பெரிய ரன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அப்ரிடி கூறினார்.
No comments:
Post a Comment