ஈஸ்ட் கோஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘காதல் டூ கல்யாணம்‘. ஆர்யாவின் தம்பி சத்யா, திவ்யா ஜோடியாக நடிக்கின்றனர். படத்தை இயக்கும் மிலிந்த் கூறியதாவது: காதல் என்பது இரண்டு பேர் சம்மந்தப்பட்டது. கல்யாணம் இரண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்டது. காதலுக்குப் பிறகு கல்யாணத்துக்கான ஏற்பாட்டுக்கு செல்லும்போது என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பது திரைக்கதை. சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் கதை செல்லும். இதில் சத்யா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். திவ்யா கார்பரேட் கலாசாரத்தில் வாழ்பவர். இவர்களிருவர் தொடர்பான காட்சிகள் பரபரப்பாக இருக்கும். இந்தப் படத்துக்காக சத்யா, மும்பையில் உள்ள அனுபம் கெர் நடிப்பு பயிற்சி பள்ளியில் இரண்டு மாதம் படித்துவிட்டு நடிக்க வந்தார். திவ்யா இதுவரை நடித்த தமிழ்ப் படங்களிலேயே இதில்தான் சிறப்பாக நடித்துள்ளார் என்று சொல்வேன். அவரது கேரக்டரும், நடிப்பும் அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. படம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மிலிந்த் கூறினார்.
No comments:
Post a Comment