3வது முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா 16.05.2011 அன்று மாலை சென்றார். அங்கு முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். பின்னர் கோப்புகளில் கையெழுதிட்டார்.
பொது விநியோக திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிடவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
No comments:
Post a Comment