உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், ரஜினி நலமுடன் இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால்தான் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை. மற்றபடி அவரைப்பற்றி வரும் தவறான வதந்திகளை நம்பவெண்டாம் என்று கூறினார்.
இந்நிலையில் 3வது முறையாக தமிழக முதல் அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தனர்.
ரஜினியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
No comments:
Post a Comment