நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்த "பொன்னர் சங்கர்" படம், அவர் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்து ஓரளவு ஓடியது. பிரமாண்ட பாடல்களுக்கும், சண்டைக்காட்சிகளுக்கும் பாராட்டு கிடைத்தது. இவரது அடுத்தபடம், தியாகராஜன் நடித்து மலையூர் மம்பட்டியான், பிரசாந்த் நடிப்பில் "மம்பட்டியான்" அடுத்த மாதம் வெளிவர உள்ளது.
பிரகாஷ்ராஜ், முமைத்தான் போன்ற பிரபல பெரிய நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர். தியாகராஜனால் அவர் நடித்த போது செய்ய முடியாத, சொல்ல முடியாத அரிய இடங்களையும், தேடிப்பிடித்து நேர்த்தியாக காட்சி அமைத்து இருக்கிறார். இதற்கிடையே, பெரிய இயக்குநர் இருவர் பிரசாந்திடம் கதை சொல்லி உள்ளனர். இதற்காக தன் கெட்டப்பை மாற்றம் செய்ய ஆலோசித்து வருகின்றனர். பிஸியான பிரசாந்த் ஜிம், குதிரை ஏற்றம், நீச்சல் இப்படி தினம் உடலை பெருகேற்றி மாலை வேளைகளில் இதை கேட்பதற்கு என்றே திட்டமிட்டு, தினம் இரண்டு, மூன்று கதை கேட்டு வருகிறாராம். விரைவில் புதுப்பட அறிவிப்பு வரலாம்.
No comments:
Post a Comment