ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2-வது ஆண்டு நிறைவையட்டி, பிரதமர் மன்மோகன்சிங் தனது இல்லத்தில் கூட்டணி தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சிறப்பான வெற்றியை பெற்று இருக்கிறது.
இந்த தேர்தல் சிறந்த, திறமையான நிர்வாகத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே நாம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என்றார்.
பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், ஜனநாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது. கடந்த சில வாரங்களில் 5 மாநில தேர்தல் அமைதியாக நடந்தது.
மேற்கு வங்காள சரித்திரத்தில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரசின் கூட்டணி கட்சி பெற்று இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அதிக அளவில் வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டு இருக்கும் நம்பிக்கையை இது உறுதி படுத்துகிறது‘‘ என்றார்.
No comments:
Post a Comment