தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையை பின்பற்றுவது, ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது என்று முதல் அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதுடன், அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடிகளை விதித்துள்ளது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருப்பது தொடர்பாக முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு விருப்பு, வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு.
இத்தகைய தேர்தல் கமிஷன் வெவ்வேறு அளவுகோல்களை கடைப்பிடிக்கக் கூடாது என்பதே மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து ஆகும்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது.
இந்திய அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படுவதுடன், அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உதாசீனப்படுத்தக் கூடியது அல்ல.
இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.
- கொல்லப்பட்ட பின்லேடனின் புகைப்படம் போலியானது! ; அப...
- ஒசாமா 'புண்ணியத்தால்' ஒபாமா செல்வாக்கு உயர்வு!
- 'ஒசாமா கொல்லப்பட்டது எப்படி?' நேரடி காட்சிகள்
- தள்ளிபோகிறது வேலாயுதம்: வருத்தத்தில் விஜய் ரசிகர்க...
- என்ன செய்யப் போகிறார் அஜீத்?
- பொன்னியின் செல்வனா? புதுமுக வேட்டையா? -அலைபாய வி...
- அப்பாடா ஒருவழியா புது பெயர் வச்சிடாங்க !
- ஒசாமாவை கண்டுபிடித்தது கொன்றது எப்படி? ; திக்... த...
- பின்லேடன் தீவிரவாதி ஆனது எப்படி?
- ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே ம...
- ஊன்று கோலுடன் நடக்கும் நடிகர் அஜீத்
- ஒசாமா பின் லேடன் சாவு- வீடியோ
- பின்லேடன் உடலை கடலில் வீசியது அமெரிக்கா!!
- ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம்
- பின்லேடன் பலி-அல்கொய்தா அணு குண்டு வீசுமா?
- அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி...
- யார் இந்த ஒசாமா பின் லேடன்?-ஒரு பார்வை ; அரிய புகை...
- கொள்ளைக்கார முதல்வர்களின் சொத்து விபரங்கள் - பட்டி...
- பின்லேடனை கொன்ற ‘சிஐஏ’ - சில குறிப்புகள்
- பர்தாவிற்கு மாறினார் நடிகை அசின்
- சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்; பெண்கள் ...
- சிறுவன் மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல்
- ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்; அமெரிக்கா மீது அண...
- நடிகர் சிவராஜ்குமாரின் தலையில் அலங்கார தூண் விழுந்...
- இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால் போராட்டம் : பாஜக
No comments:
Post a Comment