ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி இன்று டெல்லி நீதிமன்றத்தில் சந்தித்தார்.
இன்று காலை டெல்லி வந்த காந்தி, தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தார்.
காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.
எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார்.
இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அவரது பேரன் ஆதித்யாவுடன் அமர்ந்திருந்தார்.
பின்னர் கனிமொழிக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் இடையே காந்தி அமர்ந்தார். சிறிதுநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment