ஆபாச மெயிலால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கிறேன், என்று நடிகை நிலா கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிலா. ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா, சினிமா வாய்ப்பு இல்லாததால் தற்போது “பேஷன் டிரெஸ்” விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
நிலாவுக்கு சமீப காலங்களாக யாரோ மர்ம ஆசாமி ஆபாச இ-மெயில் அனுப்பி வந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த நிலா, இரு தினங்களுக்கு முன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆபாச மெயில் அனுப்பியவரை தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் ஆபாச மெயில் குறித்து நடிகை நிலா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், எனக்கு ஆபாச மெயில் அனுப்பியவனை சும்மா விடக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். சென்ற வருடமே எனக்கு இந்த நபர் எனக்கு தொடர்ந்து மெயில் அனுப்பி வந்தார். என் மேல் உள்ள தீவிர பற்று காரணமாக இது போல் அனுப்புகிறார் என்று கருதி விட்டு விட்டேன். ஆனால் ஜனவரி மாதத்தில் இருந்து ஆபாச மெயில் அனுப்ப ஆரம்பித்தார். ஆபாசமே எனக்கு பிடிக்காது. சினிமால்கூட நான் ஆபாசமாக நடிக்க மாட்டேன். அப்படிப்பட்ட எனக்கு ஆபாசமாக மெயில் அனுப்புகிறார்கள். நான் எங்கே போகிறேன். போனில் யாரிடம் பேசுகிறேன் என்பதையெல்லாம் கண்டுபிடித்து மெயில் செய்கிறார். இதனால் வெளியே செல்ல முடியவில்லை. வீட்டில் முடங்கி கிடந்து அழுதேன். ஒரு பெண் வாழ்க்கையில் இதுபோல் விளையாடுவதை அனுமதிக்ககூடாது. அவனை பிடித்து தண்டிக்கவேண்டும், என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment