நடிப்பு, நடனம் மட்டுமல்லாது சிறந்த பாடகருமான சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., பிரசாந் நடிப்பில் உருவாகும் "மம்பட்டியான்" படத்தில் ஒரு பாட்டு பாடி அசத்தி இருக்கிறார். 1983களில் தியாகராஜன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் மலையூர் மம்பட்டியான். இந்தபடத்தில் இளையராஜாவின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. இப்போது அநதபடம் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹீரேவாக பிரசாந்த் நடிக்க மீரா ஜாஸ்மின் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை தியாகராஜனே டைரக்ட்டும் செய்கிறார். பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு தியாகராஜன் இயக்கும் படம் இது. படத்தின் சிறப்பம்சமாக பல அறிய இடங்களுக்கு சென்று படமாக்கியுள்ளனர்.
மேலும் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, தமன் இசையில் பிரசாந்திற்காக, சிம்பு ஒரு பாட்டு ஒன்று பாடியுள்ளார். "மலையூர் மம்பட்டியான்" படத்தில் இடம்பெற்ற "காட்டு வழி போற பெண்னே கவல படாத..." என்ற ரீ-மிக்ஸ் செய்து, இந்தகால கட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து, அதில் சிம்புவை பாட வைத்திருக்கிறார் படத்தின் இயக்குநரும், நடிகருமான தியாகராஜன். பாட்டு நன்றாக வந்துள்ளதாகவும், விரைவில் படத்தின் ஆடியோ மற்றும் படம் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment