அரசியல் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராக சிங்கமுத்து அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தவிர செந்தில், குண்டு கல்யாணம் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் சிலரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். காமெடி நடிகர்கள் அரசியலுக்கு போவது பற்றி கருத்து தெரிவித்துள்ள காமெடி மற்றும் குணச்சிந்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், எனக்கு அரசியலே வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. எனக்கு எல்லாருமே நண்பர்கள்தான். என் நண்பர்கள் எல்லாம் பல கட்சியில் இருக்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். நான் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவன் ஆகிவிட்டால், மற்றவர்கள் வேண்டாதவர்களாக ஆகிவிடுவார்கள். எனக்கு எல்லாருமே நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதால், எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன், என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment