"மைனா" படத்தை இந்தியில் இயக்கும் பிரபுசாலமன், மும்பைக்கும், சென்னைக்குமாக பறந்து கொண்டிருந்தாலும் சென்னையில் சொந்தமாக பட கம்பெனியும் ஆரம்பித்து படத்தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறார். இதற்காக சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பத்தில் பிரமாண்டமான பில்டிங் ஒன்றை வாடகைக்கு பிடித்திருக்கும் பிரபுசாலமன், அதில் கீழே அலுவலகத்தையும் மேலே தன் வீட்டையும் குடிவைத்திருக்கிறார். இந்த விஷயம் மீடியாக்களில் (தினமலரில் அல்ல...) ஒரு கோடியே 25 லட்சத்தில் பிரபுசாலமன் சொந்த பங்களா... என செய்தியாக வெளிவர, இதைபார்த்து படித்த வீட்டு உரிமையாளர் இதற்குதான் சினிமாக்காரர்களுக்கு வீடு தருவதில்லை, என் வீட்டை உன் வீடாக செய்தி கொடுத்துவிட்டாய் பார்த்தாயா, உடனே காலிசெய் என கடுப்பாகி கத்தி தீர்த்திருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமனை! ஹவுஸ் ஓனரை சமாதானம் செய்வதற்குள் பிரபுசாலமனுக்கு போதும், போதுமென்றாகிவிட்டதாம்! பாவம்!!

No comments:
Post a Comment