நடிகர் பிரகாஷ் ராஜ் தனது 2வது காதல் மனைவிக்கு நடனப்பள்ளியொன்றை பரிசாக கொடுத்துள்ளார். முதல் காதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்த பிறகு, டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை 2வது திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். போனிவர்மா பாலிவுட்டில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர். திருமணத்துக்கு பிறகு மும்பையில் வசிக்கும் இந்த தம்பதிகள் இல்லற வாழ்க்கையை இன்புற வாழ்ந்து வருகிறார்கள்.
காதலிக்காக முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிரகாஷ் ராஜ், காதல் மனைவிக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்தார். இதையடுத்து போனி வர்மா நடன மாஸ்டர் என்பதால் அவருக்காக ஒரு பிரமாண்ட நடனப் பள்ளியை பரிசாக வழங்கியிருக்கிறார். புதிய நடனப் பள்ளியை பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். அங்கு சினிமா டான்ஸ் சல்யா, சாசா, ரும்பா, ஹிப் ஹாப் லாக்கிங், பாப்பிங் போன்ற நடனங்கள் கற்றுத் தரப்படும் என போனி வர்மா தெரிவித்துள்ளார். திறப்பு விழா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் கோவிந்தா, விவேக் ஓபராய், நடிகை நீது சந்திரா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment