ஆந்திர மாநிலம் திருச்சானூர் வி.வி.நகரை சேர்ந்தவர் சுப்பாராயுடு. இவருக்கும் கடப்பா அருகே உள்ள சோடூரை சேர்ந்த பிரியாவுக்கும் (பெயர் மாற்றம்) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமண வரவேற்பு சனிக்கிழமை இரவிலும், மறுநாள் காலை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
திருமண வரவேற்பை சனிக்கிழமை மாலை 6 முதல் 8 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் மணப்பெண் வீட்டார் திருமண வரவேற்புக்கு வர இரவு 11 மணி ஆகி விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் சுப்பா ராயுடு, திருமணத்திற்கு தாமதமாக வந்த மணப் பெண்ணை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறினார். இதனால் அங்கு இரு வீட்டார்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் மணப்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி கோடூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தாமதமாக வந்ததற்காக மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment