அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2800 இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் பாடம் வாரியாக காலி இடங்களை அறிவித்து ஆசிரியர்களை தேர்வு செய்கிறது.
இதற்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வினை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் கணிதம் பாடத்திற்கான ஆசிரியர் பணிக்கு அதிக அளவில் தேர்வு எழுதுகிறார்கள்.தமிழகம் முழுவதும் 441 மையங்களில் முதுநிலை ஆசிரியர் தேர்வு நடக்கிறது.
சென்னை மாவட்டத்தில் 37 மையங்களில் 13 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். சூளை செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடத்துவதில் சில இடர்பாடுகள் இருப்பதால் அந்த மையத்திற்கு பதிலாக அதே பகுதியில் ராட்லர் தெருவில் உள்ள ஸ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் வேணு கோபால செட்டி மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.
செயிண்ட் ஜோசப் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த தேர்வாளர்கள் அனைவரும் ராட்லர் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவா தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.எந்த தவறுக்கும் இடம் அளிக்காமல் முறையாக தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முழு கவனம் செலுத்தி வருகிறது.

No comments:
Post a Comment