கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பல்வேறு இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தொடர்புள்ள லஷ்கர் இயக்கத்தினர் பலர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. லஷ்கர் இயக்க தளபதி ஸக்கியுர் ரஹ்மான் லக்வியும் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தில் இப்போதும் பணியிலிருக்கும் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இந்தத் தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இந்தியா கூறி வருகிறது. இது பற்றிய முழுமையான விசாரணையை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்றும் இந்தியா குறை கூறி வருகிறது. லஷ்கர் இயக்க நிறுவனர் ஹபீஸ் முகமது சயீத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. இந்தியா தந்திருக்கும் ஆதாரங்கள் நடவடிக்கை எடுக்கப் போதுமானதல்ல என்பது பாகிஸ்தானின் வாதமாக இருந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் குரல் மாதிரிகளைத் தருவதற்கும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
இந்தியாவில் இந்த வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளை சந்தித்து தகவல் சேகரிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் மார்ச் மாதத்தில் மும்பை வந்திருந்தனர். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பயண நடைமுறைகளை எளிதாக்குவது, மும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெறும் வழக்கை மும்முரப்படுத்தவும் வலியுறுத்தி இந்திய அதிகாரிகள் குழு இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், ’மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளவர் மீதான வழக்கு விசாரணை மிக மெதுவாகவே நடக்கிறது. தாக்குதலில் உண்மையாக ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வரப்படவில்லை. இவர்கள் விரைவில் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்’ என்றார்.
விசா விதிமுறைகள், பாகிஸ்தான்-இந்தியா இடையே பயணம் மேற்கொள்வோருக்கு உதவியாக விசா நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்தும் உள்துறைச் செயலர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு பேச்சு நடத்துகிறது. கடந்த ஒரு வருட காலமாக இரு நாடுகளிடையே இது பற்றிய பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.
வருடத்தில் பல முறை நாட்டினுள் வந்து செல்ல அனுமதிக்கும் சிறப்பு விசா, மூத்த குடிமக்கள், குழந்தைகள் நாட்டினுள் வந்த பின்பு விசா வழங்குதல் போன்ற அம்சங்களை இரு தரப்பு அதிகாரிகளும் விவாதிப்பார்கள். இதற்கான உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், பாகிஸ்தானிலுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் குறித்தும் இரு நாட்டு உள்துறை அதிகாரிகள் பேச்சு நடத்துவார்கள்.

No comments:
Post a Comment