ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்துவதாக இலங்கை அரசின் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவில் இங்கிலாந்து தூதர் ஜான், ’இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் உள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ராணுவத்தினர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளில் ராணுவத்தினர் குறைவாக உள்ளது போன்ற நிலையே தமிழர்கள் பகுதிகளில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.
தூதரின் பேச்சை இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளதாக டெய்லி மிரர், ஐ லேண்ட் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ’வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் குறிப்பிட்ட இடங்களில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம் நிலைகொள்ள வேண்டியுள்ளது அவசியமாகிறது' என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கடத்தும் சம்பவமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரால் அக்ஷய் (15) என்னும் தமிழ் மாணவர் கடத்தப்பட்டார். பின்னர் அவரை கிளிநொச்சி அருகே விடுவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய சிறுவனின் தந்தை பிரபாகரன், ’பணத்துக்காக இந்த சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை. இதில் வேறு உள்நோக்கம் உள்ளது' என்று கூறியுள்ளார். முன்னதாக மே 19-ம் தேதி இதே பகுதியில் வேறொரு சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் மீட்கப்படவில்லை. கடந்த ஆண்டிலும் இதே போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்
No comments:
Post a Comment