வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அசாம் அரசின் ஓராண்டு நிறைவு விழா இன்று கவுகாத்தியில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
அசாம் மாநிலத்தில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசும் மேற்கொண்ட முயற்சிகள் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வன்முறையால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பதை பல தீவிரவாத அமைப்புகளும் உணர்ந்துள்ளன. எனவே, இதுவரை பேச்சுவார்த்தையில் பங்கேற்காத தீவிரவாத அமைப்புகளும் இனி அரசின் அமைதி முயற்சியில் இணைவார்கள் என்று நம்புகிறேன்.
அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறும் இன்று காங்கிரஸ் கட்சிக்கு கொண்டாட்ட நாள் ஆகும். அதே சமயம், மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம். அவர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற உறுதி பூண்டுள்ளோம்.

No comments:
Post a Comment