கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, ’குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் என்று அவரை பற்றி ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமானவர், தகுதியானவர். எனவே, அவரை பற்றிய தகவல்களை அடிப்படையாக கொண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பா.ஜனதா அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்சியின் மேலிடத்தை கேட்டுக்கொள்கிறேன். அதே வேளையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோருடன் மோடியை ஒப்பிட்டு பேசக்கூடாது’ என்று எடியூரப்பா கூறினார்.
மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், `வழக்குகள் நிலுவையில் இருப்பதால் என்னால் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செல்ல முடியவில்லை. முடிந்தால் வெள்ளிக்கிழமை (இன்று) மும்பை சென்று செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வேன்' என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment