கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7 மாதங்களாக நீடித்து வருகிறது.
இதற்கிடையே போராட்டக்குழு சார்பாக ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்டிருந்தார்.
இதற்கு தகுந்த பதில் அளிக்கும்படி தகவல் ஆணையம் இந்திய அணுமின் கழகத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்திய அணுமின் கழகம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு 13 பக்க தகவல் அறிக்கையை அனுப்பியுள்ளது.
இதில் கூடங்குளம் அணுமின்நிலைய இடம் தேர்வு செய்த விபரம், அந்த இடத்தில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதா? அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள்,அணுமின் நிலையத்துக்கு எங்கிருந்து தண்ணீர் பெறப்படுகிறது? அணுக்கழிவுகள் எந்த வகையில் கையாளப்படும்? பேரிடர் தடுப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் கூறியதாவது:-
தகவல் ஆணைய உத்தரவுப்படி இந்திய அணுமின்கழகம் அளித்துள்ள தகவல்கள் கண்துடைப்பு அறிக்கையாகும். கூடங்குளம் அணுஉலை இடம் தேர்வு சம்பந்தமாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு சிலவற்றுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளனர்.
பாதுகாப்பு குறித்து நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. பூகம்பம் குறித்த கேள்விக்கு அணுஉலையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு மட்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். தேவைப்பட்டால் பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீரை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அணுக்கழிவுகளை அகற்றி பாதுகாப்பாக வைப்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை.மொத்தத்தில் இந்த தகவல் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

No comments:
Post a Comment