'மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மனோரமா.
காமெடியா ஓகே.. குணசித்திர நடிப்பா ஓகே.. பாட்டு பாடணுமா.. வில்லன்களோட சண்டை போடணுமா.. பக்கம் பக்கமா வசனம் பேசணுமா.. ஒரு வார்த்தை கூட பேசாம நடிக்கணுமா.. எதுவாயிருந்தாலும் ஆச்சி 'ஆல்வேஸ் ரெடி!'
நடிகன், சின்னக் கவுண்டர், சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே 'தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி எவர்கிரீன் ஹிட்.
நடித்த படங்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் ஆச்சிக்கு 'கின்னஸ்' பட்டியலில் பெயர் என்பது, மேலும் ஒரு மகுடம்.
அவர் பாடிய ' வா வாத்யாரே ஊட்டாண்டே..' அந்த காலத்தில் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார்.
ஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி. நாம் வழங்கி மகிழ்ந்தது 'கலைமாமணி'.
No comments:
Post a Comment