மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த டாக்டர் தம்பதி அந்த பெண் சிசுக்களை நாயக்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் மருத்துவமனை வைத்துள்ளவர்கள் டாக்டர் தம்பதியான சுந்தம் முண்டே, சரஸ்வதி முண்டே. சுந்தம் முண்டே அறுவை சிகி்ச்சை நிபுணர். அவரது மனைவி சரஸ்வதி மகப்பேறு மருத்துவர். அவர்கள் தங்கள் மருத்துவமனையில் சட்டவிரோதமாக வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவ்வாறு பரிசோதனை செய்யும்போது அது பெண்ணாக இருந்தால் அந்த கருவைக் கலைத்தும் வந்தனர். ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக கலைக்கப்பட்ட கருக்களை தாங்கள் வைத்திருக்கும் நாய்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ம் சந்தம் முண்டே விஜய்மாலா (28) என்ற பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்றபோது அந்த பெண் இறந்தார். விஜயமாலாவுக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர் 5வதும் பெண் வேண்டாம் என்று கருவைக் கலைக்க வந்துள்ளார். விஜயமாலா இறந்ததையடுத்து டாக்டர் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஷீலா யாதவ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2010ம் ஆண்டு டாக்டர் முண்டே ஆதாரங்களை அழி்க்க கலைக்கும் பெண் சிசுக்களை தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு கொடுப்பதை என்னிடம் காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு கருவி்ல் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோனோகிராபி பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் 12 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளிலுமே அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உரிமம் ரத்தான பிறகும் அவர்கள் தொடர்ந்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கிரைம் பிரிவு போலீசாருக்கு மாநில சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
.
ReplyDelete.
CLICK >>>>> இதுதான் இந்தியா. ஜெயலலிதாவின் நடனம். தமிழனின் அவல நிலை. மற்றும் …..அறிஞர் அண்ணா. FUNNY INDIA. இது தான் தமிழக காவல்துறை. படங்கள். காணொளிகள். <<<<< TO READ.
.