ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25-ந்தேதி முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி மற்றும் விவரங்களை தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்க உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தன்னிச்சையாக வெற்றிபெற இயலாது என்பதால் பிரதான கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதாவும் மாநில கட்சிகளின் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், பழங்குடி இனத்தலைவருமான பி.ஏ.சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். இதற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பால் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அவர் சங்மாவுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் அத்வானி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பஞ்சாப் முதல்-மந்திரி பாதல் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களிடம் போனில் பேசி ஆதரவு திரட்டினார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த துணிச்சலான நடவடிக்கை தேசிய அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சங்மா முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். சோனியாவை சந்திக்க பல தடவை அவர் முயன்றார். அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதையடுத்து பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேச சங்மா திட்டமிட்டுள்ளார். பா.ஜ.க. சங்மாவை ஆதரிக்குமா? என்று தெரியவில்லை. பா.ஜ.க. என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னமும் தெளிவாகாமல் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் சார்பில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், பிரதமரின் ஆலோசகர் சாம் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க இயலாது என்று காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் சூசகமாக அறிவித்துள்ளது. மேலும் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்கி ஒதுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலர் விரும்பவில்லை. எனவே அவருக்கு ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்றாலும் பிரணாப் முகர்ஜி பெயரை சோனியா தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்க தயங்குவதால் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் இருவருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மீராகுமாரை ஜனாதிபதியாக்க பிரதமர் மன்மோகன்சிங் விரும்புவதாக தெரிகிறது.
இதற்கிடையே மாநில கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் முடிவை ஏற்போம் என்று கூறி உள்ளன.
லல்லு பிரசாத் யாதவும் காங்கிரசை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் காங்கிரசுக்கு உற்சாக டானிக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் சூசகமாக கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3-ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் இதை தெரிவித்தார். அவரிடம் நிருபர்கள், ‘காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:-
ஒரே ஒரு நிபந்தனைதான். அவர் அதிகாரியாக இருக்கக்கூடாது. மேலும் அரசியல்வாதியாக இல்லாதவரையும் ஜனாதிபதி பதவிக்கு பரிசீலனை செய்யக்கூடாது.
இவ்வாறு முலாயம்சிங் யாதவ் கூறினார்.
முலாயம்சிங் யாதவின் இந்த அறிவிப்பால் காங்கிரஸ் தலைவர் சோனியா உற்சாகம் அடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் மாயாவதியும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இடதுசாரிகள் முடிவை சோனியா எதிர்நோக்கியுள்ளார். இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்திய இடதுசாரிகள் ஜனாதிபதி தேர்தல் பற்றி விரிவாக விவாதித்தனர். சங்மாவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்று பேசப்பட்டது.
இன்னும் இடதுசாரிகள் தங்கள் முடிவை வெளியிடவில்லை. மாநில கட்சிகளிடம் ஓரளவு ஆதரவை திரட்டியபிறகு அடுத்த வாரம் வேட்பாளர் பெயரை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார். அதன்பிறகு தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டும்.

No comments:
Post a Comment