ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் தீவிரவாதிகள் தடையாக உள்ளனர். பெண்கள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்து வருகின்றனர். அதையும் மீறி அங்கு பெண்கள் கல்வி கற்கின்றனர். எனவே சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பள்ளியில் குடிநீரில் விஷம் கலந்தனர். அதை குடித்த மாணவிகள் வாந்தி- மயக்கத்தால் அவதிப்பட்டனர்.
பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமாகினர். தற்போது மீண்டும் தங்கள் கொடூர நடவடிக்கையை தலிபான் தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாக்கர் மாகாணத்தில் உள்ள ஒரு பெண்கள் படிக்கும் பள்ளியில் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்குள்ள வகுப்பறைகளில் விஷவாயுவை தெளித்தனர்.
இதை தொடர்ந்து அந்த வகுப்பறைகளில் இருந்து படித்த 122 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியைகளுக்கு மூச்சு திணறலும், மயக்கமும் தலைவலி போன்றவை ஏற்பட்டது. உடனே 125 பேரும் தாக்கரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 30 பேர் மட்டும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து சுமார் 600 பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment