ஐ.நா.வின் கடல்சார் சட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீனா கேள்வியெழுப்பியுள்ளது. இது தென்சீனக் கடல் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்னைகளில் சட்டரீதியில் தலையிட அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சி எனவும் சீனா விமர்சித்துள்ளது. அப்பிராந்தியத்தைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளுடன் சீனாவுக்கு கடல்சார் உரிமையில் பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
160 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கையெழுத்திட்டுள்ள இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நீண்ட காலமாக புறக்கணித்து வந்த அமெரிக்கா, இதில் கையெழுத்திட திடீரென எடுத்துள்ள முடிவு தென்சீனக் கடல் பிரச்னையில் தலையிட விரும்பும் அதன் சுயநல நோக்கத்தைக் காட்டுகிறது என்று சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா விமர்சித்துள்ளது.
அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ தளங்களில் உலகம் முழுவதும் தனது நோக்கத்தை அடையவே இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாகவும் ஜின்ஹுவா தெரிவித்தது.
மேலும் ’சீனா உள்ளிட்ட சில நாடுகள் தென்சீனக் கடலிலும், மற்ற கடல்பகுதிகளிலும் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுகின்றன. அதற்கு எதிராகவும், நமது வர்த்தக மற்றும் போர்க் கப்பல்கள் பயணம் செய்ய சட்ட விரோதமாக விதிக்கப்படும் தடைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இந்த உடன்படிக்கை உதவும்’ என்று கூறியிருந்த வெளியுறவுக்கான செனட் குழுவின் தலைவர் ஜான் கெர்ரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment