ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி. இவர் ஏராளமான தொழில் நிறுவனங்களையும், சாக்ஷி பெயரில் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களையும் நடத்தி வந்தனர். மேலும் பிணாமிகள் பெயரிலும் பல தொழில் நிறுவனங்களை நடத்தியதும், கறுப்பு பணத்தை அதில் முறையீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.
இவரது பிணாமியாக செயல்பட்ட தொழில் அதிபர் நிம்மகிட்ட பிரசாத் கைது செய்யப்பட்டார். ஜெகன்மோகன் நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்பட்ட ஆந்திர கலால்துறை மந்திரி மோபிதேவி வெங்கட்ரமணா ரெட்டியும் கைதானார். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சி.பி.ஐ. அடுத்தக்கட்டமாக ஜெகன்மோகன் ரெட்டியிடம் விசாரணையில் இறங்கியது. ஜெகன்மோகனை நேரில் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதை ஏற்று அவர் சி.பி.ஐ. முன் ஆஜரானார். ஐதராபாத் விருந்தினர் மாளிகையில் கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்தது. சொத்துக்கள் பற்றியும் கறுப்பு பணத்தை தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ததும், பிணாமிகள் பற்றியும் சரமாரியாக கேள்விகள் கேட்டு விசரணை நடத்தினர்.
அவற்றுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உரிய பதில் அளித்தார். 2 நாள் விசாரணை முடிவடையாததால் இன்றும் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி இன்று காலை மீண்டும் சி.பி.ஐ. முன் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜெகன்மோகனுடன் குற்றம்சாட்டப்பட்ட அவரது நிதி விவகார ஆலோசகர் விஜய்சாய் ரெட்டியும் சென்றார். அவரிடமும் இன்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
3 நாள் விசாரணைக்குப்பின் ஐதராபாத்தில் சி.பி.ஐ. போலீசார் ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்தனர்.
ஐதராபாத் மற்றும் ஜெகன்மோகனின் சொந்த ஊரான கடப்பா மாவட்டத்திலும், ஆந்திராவின் முக்கிய பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆந்திராவில் பதட்டம் நீடிக்கிறது.
hi how you get paid advertisement?
ReplyDelete