இரண்டு தினங்களுக்கு முன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வை கண்டித்து பல மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன. நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 30-ந்தேதி முழு அடைப்புக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி சார்பிலும், ஒடிசாவில் ஆளும் பாரதீய ஜனதா தள கட்சி சார்பிலும் 31-ந்தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மே 26 முதல் 30-ந்தேதி வரை எதிர்ப்பு போராட்டங்களும் மே 31-ந்தேதி கண்டன பேரணி நடத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment