கடந்த ஒரு மாதமாக குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றுள்ளதாக பாட்டீலின் பத்திரிகை துறை அதிகாரி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பாட்டீலின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா, நேற்று பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் இப்புகாரை தெரிவித்துள்ளார். அப்புகாரில் கடந்த ஒரு மாதமாக சோலார் மோட்டார், மூன்று பாதுகாப்பு விளக்குகள், இன்டர்நெட் கேபிள் மற்றும் தொலைபேசி கேபிள் போன்றவைகள் குடியரசுத்தலைவர் மாளிகை எண்.6 லிருந்து திருடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இன்டர்நெட் கேபிள் மற்றும் தொலைபேசி கேபிள்கள் இரண்டு முறை திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற திருட்டு சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment