பார்த்திபன் நடித்து டைரக்டு செய்து, 20 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், புதிய பாதை.' தன்னை கெடுத்த ரவுடியை தேடிப்போய் அவனுடன் வாழ்ந்த ஒரு துணிச்சல் மிகுந்த பெண்ணை பற்றிய கதை இது.
அதில், ரவுடியாக பார்த்திபனும், அவருடன் வாழ்கிற துணிச்சல் மிகுந்த பெண்ணாக சீதாவும் நடித்து இருந்தார்கள். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பார்த்திபனே டைரக்டும் செய்திருந்தார். தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.
இந்த படத்தில் நடிக்கும்போதுதான் பார்த்திபன் சீதா இடையே காதல் மலர்ந்தது. படம் முடிந்ததும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.
20 வருடங்களுக்குப்பின், புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது. பார்த்திபனே நடித்து, தயாரித்து, டைரக்டு செய்கிறார். படத்துக்கு, மீண்டும் புதிய பாதை' என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார்.
இதுபற்றி பார்த்திபன் கூறியதாவது:
அந்தக்காலத்தில், பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் மீண்டும் தயாரானபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினிகாந்த் நடித்த படம் மீண்டும் தயாரானபோது அஜீத் நடித்தார்.
ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகர் நடித்த படம் மீண்டும் தயாராகிறபோது, அதே நடிகர் நடிப்பது, உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை. அந்த வகையில், இது உலக சாதனை.
புதிய பாதை' படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மீண்டும் புதிய பாதை' படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஜுன் 15ந் தேதி, சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.'' இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
No comments:
Post a Comment