உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ஆருஷியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் என்பவரும், கடந்த 2008-ம் ஆண்டில், ஆருஷியின் வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டடு கிடந்தனர். இவ்வழக்கில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாயார் நூபுர் தல்வார் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
இந்த வழக்கை, சி.பி.ஐ விசாரித்து வருகிறது. சமீபத்தில் நூபுர் தல்வார் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நூபுர் மற்றும் ராஜேஷ் தல்வார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்வது தொடர்பான வாதம், காசியாபாத் நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கே.சைனி, ’சம்பவத்தன்று, ஆருஷியின் பெற்றோர், நள்ளிரவில் தான் வீடு திரும்பினர். அப்போது படுக்கையறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ராஜேஷ் தல்வார், தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி, அந்த அறையை திறந்தார். அங்கே ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும், தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் ’கோல்ப்' விளையாடும் குச்சியால் இருவரையும் தாக்கினார். இருவரும் மயக்கம் அடைந்ததும், மருத்துவர்களான ராஜேஷ் தல்வாரும், நூபுரும் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால், இருவரின் தொண்டையையும் அறுத்து கொலை செய்தனர். இருவரது கழுத்திலும் உள்ள காயங்கள், நேர்த்தியாக அறுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது’ என்று வாதிட்டார்.
மேலும், ’இருவரும் சேர்ந்து ரத்தம் படிந்திருந்த அந்த அறையை சுத்தம் செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையையும் மாற்ற முயற்சித்தனர். கவுரவம் கருதி, இந்த கொலைகளைச் செய்துள்ளனர்’ எனவும் சி.பி.ஐ வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் ராஜேஷ் தல்வார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதை மறுத்தார்.
ஆருஷியின் தாயார் நூபுர் கூறுகையில், "சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், பாலியல் உறவு குறித்த விஷயத்தை பெரிதாக கருத மாட்டார்கள். பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக, யாரையும் கொலை செய்ய மாட்டார்கள். வலுவான ஆதாரங்கள் எதுவுமின்றி, சூழலை அடிப்படையாக வைத்து, சி.பி.ஐ தனது வாதத்தை முன் வைக்கிறது' என்றார்.

No comments:
Post a Comment