ஐ.பி.எல். போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. உபரியாக இருக்கும் வருமானத்தை முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
2003-04-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் 65 பேர் உள்பட 160 வீரர்களுக்கு ரூ.70 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின்படி 100 டெஸ்டுக்கு மேல் விளையாடுபவருக்கு ரூ.1 1/2 கோடி கிடைக்கும். 75-99 டெஸ்டுக்கு ரூ.1 கோடி என்பது உள்பட விளையாடிய போட்டிக்கு தகுந்தவாறு ஊக்கத்தொகை விவரம் அறிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். பிளே-ஆப் போட்டியின் போது ஊக்கத் தொகையை வழங்க முடிவு செய்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பெயர்களை அறிவித்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், அசாருதீன் ஆகியோரது பெயர் ஊக்கத் தொகை பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக கபில்தேவ் ஐ.சி.எல். அமைப்பை தொடங்கினார். தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் அவரது பெயர் இடம் பெற வில்லை என்று கூறப்படுகிறது.
1983-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் ரூ.1 1/2 கோடி ஊக்கத்தொகை பெற தகுதியானவர். அசாருதீன் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். சூதாட்டத்தல் ஈடுபட்டதற்காக 2000-ம் ஆண்டு இவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதனால் அவரது பெயரையும் கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
அசாருதீன் 99 டெஸ்டில் விளையாடி இருப்பதால் ரூ.1 கோடி பெற தகுதியானவர்.

No comments:
Post a Comment